காரைக்கால் அடுத்த கோவில் பத்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை முன்னிட்டு இன்று சிறப்பு அலங்காரம் உத்தான சயனல் ஸ்ரீ கோதண்டராமர் சேவை சாதிக்கிறார். முன்னதாக மஞ்சள், பால், சந்தன உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.