காரைக்கால் அடுத்த கோட்டிச்சேரி பகுதியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 34ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு வேள்வி பூஜை நடைபெற்றது. இவ் வேள்வி பூஜையை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான சக்திகள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் இவ் வேள்வி பூஜையில் ஓம் சக்தியின் 1008 மந்திரங்கள் ஓதப்பட்டது.