காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாவது செவ்வாய் கிழமையை முன்னிட்டு இன்று ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.