இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? - மக்கள் என்ன சொல்கிறார்கள்.

70260பார்த்தது
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? - மக்கள் என்ன சொல்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து சில மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு போடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மக்கள் ஊரடங்கு குறித்து என்ன மனநிலையில் உள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள நமது லோக்கல் செயலியில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் முழு ஊரடங்கு அவசியம் என 43.58 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கே போதுமானது என 41.29 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். மேலும் ஊரடங்கே வேண்டாம்; அவசியமில்லை என்று 15.13 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர்.