பிரபல நடிகைக்கு நடிகருடன் நிச்சயதார்தம்

100492பார்த்தது
பிரபல நடிகைக்கு நடிகருடன் நிச்சயதார்தம்
மதராசபட்டினம், தாண்டவம், ஐ, தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான எமி ஜாக்சன் ரஜினியின் 2.0வுக்கு பிறகு சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜார்ஜ் பனாயிடோ என்பவருடன் நிச்சியதார்தம் செய்துகொண்டார். பின்பு இவர்களுக்கு குழந்தையும் பிறந்தது. இதனையடுத்து திருமணம் செய்துகொள்ளாமல் சிறிது காலம் இணைந்து வாழ்ந்தனர். இதனையடுத்து 2021லிருந்து ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் டேட்டிங் செய்து வந்த இவர் 2022ல் காதலை உறுதி செய்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது மோதிரங்களை மாற்றிக்கொண்டு நிச்சியதார்தம் செய்துகொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி