2024 ஜனவரி 1ஆம் தேதியுடன்
ஆழ்வார் மோட்ச நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதேசி விழா நிறைவு பெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி விழா
வையொட்டி பெரம்பலூர்
மதனகோபால
சுவாமிபெருமாள்
கோவிலில் பகல் பத்து உற்ச
வம் முடிந்து, கடந்த 23-
ந்தேதி காலை பரமபதவா
சல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அன்று இரவு ராப்பத்து
உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ராப்பத்து
உற்சவத்தின்
9-வது
நாளான நேற்று இரவு
சிறப்பு அலங்காரத்தில் மதனகோபால சுவாமி பெருமாள் எழுந்தருளி
கோவிலில்
வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது. ராப்பத்து உற்சவத்தின் 10-வது நாளான 2024 ஜனவரி - 1 ம் தேதி திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் கோவிலில் ஆழ்வார் மோட்ச நிகழ்ச்சியுடன் சொர்க்கவாசல் அடைக்கப்படுகிறது. இதனையடுத்து வைகுண்ட ஏகாதசி விழாவும் நிறைவு பெறுகிறது. என்பது குறிப்பிடதக்கது.