பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில், பாஜகவின் கூட்டணியில் தாமரை சின்னத்தில், வேட்பாளராக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அதற்காக முசிறி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரராக வரதராஜன் என்பவர் உள்ளார். அவர் முசிறியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி தேர்தல் பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 2ம் தேதி பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகத்திடம், அவரது கூட்டணி கட்சியினருடன் வந்து கொடுத்த புகார் மனுவில்
வரதராஜன் தங்கியிருந்து. அவரது அறையில் பணம் கட்டுகட்டாக இருப்பதாக எழுப்பட்ட புரளியின் பேரில், முசிறி டிஎஸ்பி யாஷ்மின் தலைமையில் போலீசாரும், முசிறி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் திமுகவினர் வெளியே திரண்டு இருந்த நிலையில், அவரது அறையை சோதனையிடப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆத்திரமடைந்த திமுகவினரும், எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜனும், ஐகேகே கட்சியினரை தகாத வார்த்தைகாளல் திட்டினார். மேலும் பல்வேறு வழக்குகளை போட்டு சீரழித்து விடுவோம் என்றும், தொகுதியில் கட்சிப் பணி செய்யக் கூடாது. கடந்த ஆட்சியில் எங்கள் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று விட்டு தற்போது எங்களுக்கு எதிராகவே வேலை செய்கீறார்களா என மிரட்டுகிறார்கள். எனவே அவர்கள் மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனுவை கொடுத்து சென்றனர்.