அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

569பார்த்தது
அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
குரும்பலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 40 கௌரவ விரிவுரையாளர்களும், 10 அலுவலக பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர் இவர்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலம் மாத ஊதியம் வழங்கி வரப்பட்ட நிலையில், கடந்த 2023 ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் கௌரவ விரிவுரையாளர்களுக்கும் அலுவலக பணியாளர்களுக்கும் சம்பளம் வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது, அதனை கண்டித்தும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தங்களுக்கு அரசு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கல்லூரி முன்பு ஜனவரி 2ஆம் தேதி கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்றும், சம்பளம் வழங்காதவரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரமெளலிதலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன் உள்ளிட்ட கௌரவ விரிவுரையாளர்கள் அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி