வீரபாண்டியன் கட்டபொம்மனின் படத்திற்கு மாலை அணிவிப்பு

64பார்த்தது
வீரபாண்டியன் கட்டபொம்மனின் படத்திற்கு மாலை அணிவிப்பு
வீரபாண்டியன் கட்டபொம்மன் 264 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அனைத்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட தமிழக நாயுடு கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூர், நகர் எளம்பலூர் சாலையில், தம்பி நகர் பகுதி அருகே, வீரபாண்டியன் கட்டபொம்மன் 264 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அனைத்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன, தமிழக நாயுடு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ரெங்கராஜ், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜனார்த்தனன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வராஜ், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் அறக்கட்டளையின் மாவட்ட தலைவர் புவனேந்திரன் பேசும்போது, நாயுடு இனத்தை சேர்ந்த தேமுதிக கட்சியின் நிறுவனரும் நடிகருமான விஜயகாந்த். இறப்பிற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி பின்பு பெரம்பலூரில் உள்ள ராணி மங்கம்மாளுக்கு சொந்தமான இடத்தில், தமிழக அரசு சார்பில், விஜயகாந்த் மற்றும் ராணி மங்கம்மாள் இருவருக்கும் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது தமிழக நாயுடு கூட்டமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி