போலீசாருக்கு குழுக்கள் முறையில் பணி ஒதுக்கீடு

65பார்த்தது
வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கான இணையவழி கணினிமுறை குலுக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம், தேர்தலுக்கான காவல்துறை பார்வையாளர் மணிஷ் அகர்வால், முன்னிலையில் நடைபெற்றது.

நடைபெறவுள்ள பராளுமன்றப் பொதுத்தேர்தலில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத்தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள 354 காவலர்களுக்கான இணையவழி கணினிமுறை குலுக்கல் தேர்தல் காவல்துறை பார்வையாளர் மணிஷ் அகர்வால் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம், முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், மாவட்ட
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயா, தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் அருளானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி