டீசல் கொட்டி பற்றி எரிந்த லாரி - வீடியோ

5134பார்த்தது
நாமக்கல்லில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலையில் சிமெண்ட் ஏற்றுவதற்காக ஓட்டுனர் நாமக்கலைச் சேர்ந்த நயினார்(35) என்பவர் லாரியை எடுத்து வந்துள்ளார். அப்போது, பெரம்பலூர் அரியலூர் சாலையில், நான்கு ரோடு அருகே இரவு சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்க டயர் வெடித்துள்ளது. இதில் லாரியின் டீசல் டேங்க் சேதமடைந்து டீசல் வெளியேறியதால் சாலை கொட்டியுள்ளது. அப்போது உராய்வின் காரணமாக. லாரி தீப்பிடித்துக் கொண்டது. ஓட்டுநர் நயினார் லாரியை அப்படியே நிறுத்திவிட்டு கீழே இறங்கி உயிர் தப்பினார். லாரியின் பின்பக்கம் மரபாடி முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியதால் சாலையின் இரு புறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கத் தொடங்கியது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து. பரவாமல் தடுத்தனர். ஆனால் லாரி எரிந்து எலும்புக் கூடானது. இந்த தீ விபத்துகுறித்து பெரம்பலூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீராகி வாகனங்கள் செல்ல தொடங்கின. இச்சம்பவத்தினால் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி