பைக் விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி

12549பார்த்தது
ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திருச்சி தாளக்குடி அருகே அகிலாண்டபுரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஜெயராணி அவரது பேரக்குழந்தை இனியன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி ஆகிய 3 பேரும் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த சாலையில் கீழ் அன்பில் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் தனது பல்சர் வாகனத்தில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது வாகனம் முன்னாள் சென்ற ஸ்ப்ளெண்டர் பைக் மீது மோதினார். இதில் ஸ்ப்ளெண்டரும், பல்சரும் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் பல்சர் பைக்கானது அதிக ரேசுடன் சறுக்கி சென்று, நடந்து சென்று கொண்டிருந்த ஜெயராணி, இனியன், ராஜேஸ்வரி ஆகிய மூன்று பேர் மீது மோதியது. இதில் ஐந்து பேருமே படுகாயம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே விபத்து குறித்த சிசிடிவி காட்சி ஆனது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி