தாய், சகோதரியை கொலை செய்த பெண்ணிற்கு இரட்டை ஆயுள் தண்டனை

77பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணி (68), ராஜேஸ்வரி (28) இளங்கோநகர் அய்யலூர். ஆகிய இருவரும் வாயில் நுரையுடன் வீட்டில் இறந்து கிடந்ததாகவும் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மருவத்தூர் காவல்நியைத்தில் அளித்த புகாரைப் பெற்று மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணுசாமி வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கினை விசாரித்த மருவத்தூர் காவல் ஆய்வாளர் சுகந்தி இறந்த ராணியின் மகளான வள்ளி (35) என்பவரை விசாரணை செய்ததில் அவர் மீது சந்தேகம் வரவே அவரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து விசாரணை செய்ததில் அவர்தான் சொத்திற்காக தனது அம்மா மற்றும் தங்கை ஆகிய இருவரையும் விஷம் வைத்து கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் வள்ளி மீது நீதிமன்றத்தில் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்குப் பின் 26. 07. 2024-ம் தேதி வழக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவ்வழக்கின் குற்றவாளியான அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த வள்ளி - 35 என்பவருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை ரூபாய் 10000/- அபராதமும் விதித்தும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 வருடம் சிறை என்றும் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி