ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நிகழ்சி

85பார்த்தது
பெரம்பலூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் நிகழ்சி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காருகுடி கிராமத்தில் உள்ள. ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் உள்ளது கோவிலுக்கு புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டு கிராம மக்கள் பங்களிப்போடு தேர் செய்யும் பணி நடைபெற்றது, அதிக முறைப்படி புதிய தேர் செய்யும் பணிகள் முடிவடைந்த நிலையில், புதிய திருதேர் வெள்ளோட்டம் ஏப்ரல் 22 ஆம் தேதி காலை 11மணி அளவில் ஸ்ரீ கணபதி ஹோமம் செய்யப்பட்டு தேரின் மீது மகா கும்பாபிஷேகம் செய்யட்டதை தொடர்ந்து புதிய திருதேரை வடம்பிடித்து இழுத்து வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது வருகின்ற 13- 5- 2024 அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கி 22 -5- 2024 அன்று திருத்தேர் வீதி உலா வரும் என்று கூறப்படுகிறது. அதற்காக இன்று தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்ற நிலையில், இதற்கான மகா மாரியம்மன் தேர் திருவிழா வரும் மே மாதம் கிராம பொதுமக்கள் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி