விசிக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

1518பார்த்தது
விசிக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளரும் ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளருமான இரா. கிட்டு, வெளியிட்டுள்ள தகவலில், மின்னணு இயந்திர வாக்குச்சாவடி முறையை இரத்து செய்து , வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத இயற்கை பேரிடருக்கு உரிய நிதி வழங்க மறுத்தும், இயற்கை பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய மோடி அரசை கண்டித்தும், ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ஜனவரி -4ம் தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர் கிட்டு விவசாய அணி மாநில செயலாளர் வீர செங்கோலன், மண்டல மேல்நிலைப் பொறுப்பாளர் இளமாறன். ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டனர் உரையாற்ற உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர, பேரூர், கிளைக் கழக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள். திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார், மேலும் இதற்கான அழைப்பிதழைகட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகளுக்கு வழங்கினார்.