சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் சிறை தண்டனை: ஆட்சியர் எச்சரிக்கை

1058பார்த்தது
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் சிறை தண்டனை: ஆட்சியர் எச்சரிக்கை
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் வெளியிட்ட தகவலில்,

மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன்படி, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே இருசக்கர வாகனங்களையும், போக்குவரத்து அல்லாத வாகனங்களையும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே மோட்டார் வாகனச் சட்டத்திற்கு புறம்பாக இயக்கும் சிறார்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 199A-ன்படி 3 வருடங்களுக்கு சிறை தண்டனையும் மற்றும் ரூ. 25, 000 அபராதமும் விதிக்கப்படும்.

மேலும், அவ்வாறு இயக்கும் வாகனத்தின் பதிவுச்சான்று 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். 18 வயது அடையாத சிறார்கள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் மோட்டார் வாகனச் சட்டப்படி அவர்களுக்கு 25 வயது முடியும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படமாட்டாது. எனவே இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களை இயக்கும் நபர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்று மோட்டார் வாகனச் சட்டப்படி பாதுகாப்புடன் இயக்க அறிவுறுத்தப்படுகிறது.

அவ்வாறு மோட்டார் வாகனச் சட்டத்திற்கு புறம்பாக இயக்கும் நபர்கள் மீது காவல் துறை போக்குவரத்து துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் சிறார்கள் மூலம் வாகனத்தை இயக்கி விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மேற்கண்ட சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி