வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை ஆட்சியர் ஆய்வு

57பார்த்தது
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 1665 வாக்குச்சாவடிகளில் 903 வாக்குச்சாவடிகள் வெப்கேமராக்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க செய்யப்பட்டள வசதிகளை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம். பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத்தொகுதிகளிலும், 1665 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.
இதில் பதட்டமான வாக்குச்சாவடிகள் உட்பட 903 வாக்குச்சாவடி மையங்களில் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 903 வாக்குச்சாவடிகளையும் இணையவழியில் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருந்து கண்காணித்திடும் வகையில் செய்யப்பட்டுள்ள வசதிகளை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம். ஏப்ரல் 18ஆம் தேதி மாலை 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும், அமைக்கப்பட்டுள்ள வெப் கேமராக்களின் செயல்பாடுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் எந்தவித இடையூறும் இல்லாமல் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து இணைப்புகள் சரியாக உள்ளதை உறுதி செய்தார்.