2026ஆம் சட்டமன்ற தேர்தலில் மக்களின் எதிர்ப்பு எதிரொலிக்கும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த சசிகலா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைமை 2026இல் தெரியும். தமிழக முதல்வரின் சுற்றுப்பயணம் என்பது ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதற்காக தான் என்றார்.