சென்னை: சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழா இன்று (ஜன.,05) நடைபெற்றது. எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை புரிந்துகொள்ள வழிவகை செய்யும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும்" என்றார்.