பூஜை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லேஷ் கவுட் என்பவரது வீட்டில், பெத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் பலர், எல்லம்மா சாமிக்கு பூஜை செய்துகொண்டிருந்தனர். அப்போது மைக்கில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ஒருவர் இறந்தார். சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.