பகலில் கட்டுமான பணிகளுக்கு தடையில்லை!

56பார்த்தது
பகலில் கட்டுமான பணிகளுக்கு தடையில்லை!
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான நிறுவனங்கள் தங்களது பணிகளைத் தொடர தொழிலக பாதுகாப்பு இயக்ககம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, எவ்வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டிருந்தது. கோடை வெயில் காரணமாக தொழிலாளர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மே மாத இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி