நீலகிரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு

78பார்த்தது
உலகப் புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவில் பெரிய புல் மைதானத்தில் ஸ்பிங்க்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி நடைபெற்று வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து அருகில் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

மகாவீர் ஜயந்தி முன்னிட்டு உதகையில் உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதில் தாவரவியல் பூங்காவில் உள்ள பசுமையான புல்வெளிகளை பராமரிக்கும் விதமாக பெரிய புல் மைதானத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பாக ஸ்பிங்க்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மைதானத்தில் இருந்து ஸ்பிங்க்லர் மூலம் தண்ணீர் வட்டமடிக்கும் அழகான காட்சிகளை சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. இதன் அருகே நின்று சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் குளிர் குளிர் கால நிலையை அனுபவித்தவாறு உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி