நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் பேசும் போது.
கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் பேசிய அவர் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா பெரும்பாலும் கலைஞர் அரங்கம் தமிழ் வளர்ச்சி அரங்கம் பயிலரங்கம் போன்ற அரங்குகளில் நடைபெற்ற விழாவிற்கு தான் சென்று உள்ளதாகவும் ஆனால் முதன்முறையாக உதகை அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் பட்டமளிப்பு விழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெறுவது பழங்குடியின மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடைபெறுவது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.
விழாவில் 675 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை அமைச்சர் வழங்கி கௌரவித்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில் சுமார் 1963 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளனர்.