பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்

3263பார்த்தது
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி 13வது வார்டு ரோகிணிதியேட்டரில் இருந்து தமிழகம் செல்லும் சாலையில் பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ் வீடு உள்ளது அவரின் வீடு அருகே கிறித்துவ தேவாலையம் ஒன்றும் உள்ளது இந்நிலையில் நேற்று இரவு புத்தாண்டு என்பதால் தேவாலயம் உள்ள பகுதி சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தால் போக்குவரத்துக்கு இடையூராக இருந்ததாக தெறிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கட்சி பணிகளை முடித்து விட்டு பா, ஜ, க, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தனது வீட்டிற்க்கு வாகனத்தில் செல்லும் போது தேவாலயம் முன்புறம் இரு சக்கரவாகனங்கள் நின்று இருந்ததால் அவரின் வாகனம் செல்லமுடியாததால் இருசக்கர வாகனங்களை எடுக்க சொன்னபோது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது இதனால் கை கலப்பும் ஏற்பட்டதில் மாவட்ட தலைவருக்கு மார்பில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன் ராஜ் உதகை அரசு மருத்துமணையில் அனுமதிக்கபட்டார் இதில் அவருக்கு மார்பு எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டு உள்ளது எனவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உதகை பாஜக மண்டல தலைவர் பிரவின் தலைமையில் மாவட்ட துணை பரமேஸ்வரன் முன்னிலையில் ரோகிணி சதுக்கம் பகுதியில் மாவட்ட தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி