கோத்தகிரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

77பார்த்தது
கோத்தகிரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோத்தகிரி வருவாய்த்துறை சார்பில் டானிங்டன் பகுதியில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கோத்தகிரி தாசில்தார் கோமதி மற்றும் தேர்தல் தாசில்தார் சதீஷ் நாயக் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஊர்வலத்தில் இளைஞர்கள் இ. வி. எம் வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரிகளை உடலில் மாட்டியவாறு சென்றனர். மேலும் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு அவர்கள் "எனது வாக்கு , எனது பெருமிதம். எனது வாக்கு, எனது உரிமை" என்று கோஷங்கள் எழுப்பியவாறு தேசிய கொடியின் வண்ணத்திலான பலூன்களை பறக்க விட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், வருவாய்த்துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கமல் நன்றி கூறினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி