மருத்துவ குழு நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை

1578பார்த்தது
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள செந்நாய்களுக்கு மயிரிடர் தொற்று நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழு நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தனக்கென ஒரு எல்லை கோடு அமைத்து வாழக்கூடிய வனவிலங்கு செந்நாய்கள் ஆகும்.

கூட்டம் கூட்டமாக வாழக்கூடிய செந்நாய்கள் காடுகளையும், நீர் நிலங்களையும் பேணி காப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

காடுகளின் ராணுவ வீரர்களாக செந்நாய்களை பார்த்தால் யானை, புலி, கரடி போன்ற வன விலங்குகள் கூட பயந்து ஓடிவிடும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த செந்நாய்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில் வாழக்கூடிய செந்நாய்களுக்கு வறட்சி காலத்தில் ஏற்படக்கூடிய நோயான மயிரிடர் எனப்படும் தொற்று நோய் பரவி வருகிறது.

பொக்காபுரம் வனப்பகுதியில் வாழும் ஏழு செந்நாய் கூட்டத்தில் நான்கு நாய்களுக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர், வனத்துறையினர் ஒன்றிணைந்து வனப்பகுதிக்குள் நோய் ஏற்பட்டுள்ள செந்நாய்களைக் கண்டறிய பணியில் ஈடுபட்டுள்ளனர்

தொடர்புடைய செய்தி