கல்லக்கொரை கிராமத்தில் விமர்சியாக கொண்டாடப்பட்ட "மாரிஹப்பா" திருவிழா.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கல்லக்கொரை கிராமம். இங்கு முன்னொரு காலம் முதல் சுமார் 300 குடும்பங்களுக்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர்.
முன்னோர் காலம் முதல் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் மாரியம்மன் திருவிழா மாரிஹப்பா இரண்டு நாட்கள் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.
கோவிலில் பூஜை நமஸ்காரங்களுடன் நடைபெற்று திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். மேலும் பாரம்பரியமாக பின்பற்றி வரும் கோலாட்டம் ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடனமாடி சிறப்பித்தனர்.
மேலும் வண்ண ஒளி விளக்குகள் மிளிர ஆடல் பாடல் என திருவிழா கலை கட்டியது. இந்த திருவிழாவில் குழந்தைகளுக்கு நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பாக நடனமாடிய குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இரண்டு நாட்கள் கொண்டாடிய திருவிழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆண்கள் பெண்கள் என்று எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து நடனமாடி மகிழ்ந்த காட்சிகள் திருவிழா காலங்களில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.