யானைகள் நுழைவதை தடுக்க ‘தீ’ மூட்டி கண்காணிப்பு

1555பார்த்தது
யானைகள் நுழைவதை தடுக்க ‘தீ’ மூட்டி கண்காணிப்பு
கூடலூர் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக, காட்டு யானைகள் இரவு நேரங்களில் உணவு தேடி குடியிருப்புக்குள் நுழைந்து, விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருவது அதிகரித்துள்ளது.

வன ஊழியர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியாமல் திணறினர். இதனை தடுக்க, வன ஊழியர்கள் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அல்லூர் வயல், ஏழுமுறம், கோடமூலா, மாக்கமூலா, செலுக்காடி, கோல்கேட் குடியிருப்பை ஒட்டிய வன எல்லைகளில், இரவில் தீ மூட்டி யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி