மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய குடியரசு தலைவர்

69பார்த்தது
வெலிங்டன் ராணுவ போர் நினைவு தூணில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு


4 நாட்கள் பயண மாக பலவேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நீலகிரி மாவட்டத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேற்று வருகை புரிந்தார்

இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில்  நிகழ்ச்சியில கலந்து கொள்ள சாலை மார்க்கமாக ஊட்டியிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகை புரிந்தார் அவருக்கு குன்னூர் ராணுவ பயிற்சி மைய கமாண்டண்ட் சுனில் குமார் யாதவ், மற்றும் ராணுவ பயற்சி கல்லூரி கமாண்டன்ட் வீரேந்திர வாட்ஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக 1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் உள்ள போர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து இந்திய குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார். ராணுவ இசை பேண்ட் குழு மற்றும் ராணுவ வீரர்கள் அணி வகுப்பும் நடைபெற்றது. பின்னர் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத் தினருடன் உரையாடி அவர்களை கௌரவப்படுத்தினார்.
இதில் ராணுவ உயர் அதிகாரிகள் பயிற்சி பெறும் ராணுவ வீரர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  அங்கிருந்து புறப்பட்டு  சென்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி