நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை பகுதியில் குடியிருப்பு பகுதிகள் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்த வருகின்றனர் பகல் நேரங்கள் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளால் மக்கள் நாள்தோறும் வெளியே வர அச்சமடைந்துள்ளனர் தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டன் கொல்லி, கொட்டாய் மட்டும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்த வருகிறது இதனால் பொதுமக்கள் காட்டு யானைகளை விரட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் நான்கு கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை கண்காணித்து அடர்வண பகுதிக்குள் விரட்டும் பணியினை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் தேவர் சோலை பகுதியில் தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் கண்காணித்து அதை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ட்ரோன் சத்தத்தை கேட்டு காட்டு யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.