நீட் தேர்வு வினாத்தாள் - புதிய நடைமுறை

71பார்த்தது
நீட் தேர்வு வினாத்தாள் - புதிய நடைமுறை
முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தயாரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மே மாதம் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்த பிறகு ஜூன் 23-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளை முறியடிப்பதற்காக தேர்வு நடைபெறுவதற்கு 2 மணி நேரம் முன் வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசும் தேர்வு முகாமையும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி