சுவிட்சர்லாந்தின் லாசன் நகரில் டைமண்ட் லீக் தடகளத் தொடர் நேற்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.49 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்தார். இந்த சீசனில் அவரது சிறப்பான செயல்திறனாக இது அமைந்துள்ளது. இப்போட்டியில் கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.61 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.