நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவி நளினி சுரேஷ் பாபு. இவர் இன்று திருச்செங்கோடு நகரப் பகுதிக்கு குடிநீர் வழங்கும் நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு சரியான குடிநீர் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என நகர்மன்ற தலைவி நல்லி சுரேஷ்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.