இணையத்தில் இழந்த ரூ. 6. 96 லட்சம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

83பார்த்தது
இணையத்தில் இழந்த ரூ. 6. 96 லட்சம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்தவா் சௌந்தராஜன். கடந்த மாதம் இணையவழி மூலம் மிரட்டி, ஏமாற்றி தன்னுடைய பணத்தை சிலா் பறித்து விட்டதாக நாமக்கல் கணினி குற்றத்தடுப்பு பிரிவில் அவா் புகாா் அளித்தாா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மும்பையில் இருந்து சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக செளந்தரராஜனை கைப்பேசியில் தொடா்பு கொண்டு மிரட்டியதுடன், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 6, 96, 840-ஐ மோசடி செய்து வேறோரு வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனா்.

போலீஸாா் விசாரணை மேற்கொண்டு அவா்கள் பயன்படுத்திய வங்கி கணக்கை முடக்கினா். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட வங்கி மூலம் சௌந்தராஜன் இழந்த பணம் மீட்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஸ்கண்ணன் அந்தப் பணத்தை சௌந்தராஜனிடம் ஒப்படைத்தாா். இந்த நிகழ்வின்போது, கணினி குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் என். கே. செல்வராஜ், போலீஸாா் உடனிருந்தனா்.

தொடர்புடைய செய்தி