மரவள்ளி டன்னுக்கு ₹1000 சரிந்தது

578பார்த்தது
மரவள்ளி டன்னுக்கு ₹1000 சரிந்தது
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டாரம் பேளுக்குறிச்சி, கல்குறிச்சி, மேலப்பட்டி, சிங்களாந்தபுரம் மற்றும் புதுச்சத்திரம் வட்டாரம் மின்னாம்பள்ளி, திருமலைப்பட்டி, நவணி, உடுப்பம், குளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், கொல்லிமலை வட்டாரம் அரியூர் நாடு, வளப்பூர் நாடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து செல்லப்பம்பட்டி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். சேகோ ஆலையில் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவு சத்து புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு 11 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வைரயிலும் விலை குறைந்து ₹ 10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், சிப்ஸ் தயாரிக்க பயன்படும் மரவள்ளி கடந்த வாரம் டன் ஒன்றுக்கு ₹12 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது, ₹500 வரை விலை குறைந்து ₹11, 500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மரவள்ளி கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெறும் நிலையில் வரத்து அதிகரித்து, விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி