சிதிலமான படிக்கட்டுகளை சீரமைக்க வலியுறுத்தல்

549பார்த்தது
சிதிலமான படிக்கட்டுகளை சீரமைக்க வலியுறுத்தல்
கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோயிலுக்கு செல்லும் பாதையின் படிக்கட்டுகளை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அரியூர் நாடு பொதுமக்கள் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொல்லையில் பிரசித்தி பெற்ற கொல்லிப்பாவை என்கிற எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் முக்கிய விசேஷ நாட்களில் தரிசனம் செய்ய வருகின்றனர். மேலும் உள்ளூர் பொது மக்கள் ஆண்டுதோறும் திருவிழா நடத்துகின்றனர். பிரதான சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வனப்பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது.

இதற்காக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு படிக்கட்டுகள், சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக, படிக்கட்டுகள் மற்றும் சிமெண்ட் சாலை பழுதடைந்து படிக்கட்டுகள் உடைந்து போயின இத னால் கோயிலுக்கு சென்றுவர பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து படிக்கட்டுகளையும், சிமெண்ட் தளங்களை சீரமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி