பவித்திரம் சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு

82பார்த்தது
பவித்திரம் சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு
எருமப்பட்டி ஒன்றியம் பவித்திரம், செவ்வந்திப்பட்டியில் வாரந்தோறும் திங்கட்கிழமை 2 ஆட்டுச்சந்தைகள் நடைபெறுகிறது. ஈரோடு, காங்கேயம், திருப்பூர், முசிறி, துறையூர், உப்பிலியாபுரம், பச்சைமலை, கோயமுத்தூர், கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்க வருகின்றனர். நவலடிப்பட்டி, வரகூர், வடவத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு ஓட்டிவந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆடுகள் இறைச்சிக்காக வாங்கி செல்லப்படுகிறது.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நேற்று கூடிய சந்தைக்கு சுமார் 400க்கும் மேற்பட்ட ஆடு கள், 300க்கும் மேற்பட்ட கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதற்காக வந்திருந்தனர். இதனால் ஆடுகள் ₹26 லட்சத்திற்கு விற்பனையானது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறைந்த அளவிலான வியாபாரிகள் கோழிகளை வாங்க வந்திருந்தனர். ₹1 லட்சத்திற்கு கோழிகள் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக ₹27 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி