6ம் வகுப்பு மாணவன் உடல்நலக் குறைவால் சாவு

64பார்த்தது
6ம் வகுப்பு மாணவன் உடல்நலக் குறைவால் சாவு
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூர்நாடு பிளாண்ட்டூர்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரபாபு. இவரது மகன் பிரதி(11), ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 6ம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த பிரதிக்கு, நேற்று முன்தினம் இரவு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர், அவனை வாழவந்திநாடு செம்மேடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரதியின் உடல்நிலை மோசமடைந்தது.

இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரதி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த தகவல் அறிந்த வாழவந்திநாடு போலீசார், பிரதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி