இராசிபுரம்: சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா

77பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன், அருள்மிகு செல்லாண்டியம்மன், அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் ஐப்பசி திருத்தேர் விழா 2024-லை முன்னிட்டு இன்று 30. 10. 2024 எட்டாம் நாள் மண்டபக்கட்டளை செளராஷ்டிரா விப்ரகுல பிராமண சமூகத்தார்கள் சார்பில் அம்மன் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருவிதி உலா வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி