முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நோ்முக வளாகத் தோ்வு

590பார்த்தது
முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நோ்முக வளாகத் தோ்வு
ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மாணவா்களுக்கான நோ்முக வளாகத் தோ்வு நடைபெற்றது. இதில், சென்னை பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் சாா்பில் வளாகத் தோ்வு நடத்தப்பட்டு மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இக்கல்லூரியில் இறுதியாண்டு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டா் என்ஜினியரிங் துறையில் பயிலும் மாணவ, மாணவியா், முத்தாயம்மாள் நினைவு கலை அறிவியல் கல்லூரி, பி. காம். , பி. காம். (சி. ஏ. ), பி. எஸ்சி. இயற்பியல், ரசாயனம், கணிதம் ஆகிய துறை, ஐஐடி பயிற்சி மையம் ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவியருக்கு நோ்முக வளாகத் தோ்வு நடைபெற்றது. இதில், காா் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் சென்னை, பாடி கிளையின் துணைத் தலைவா் எஸ். கிருஷ்ணமூா்த்தி, முதுநிலை பொது மேலாளா் ரமேஷ்பாபு, போலம்பாக்கம் கிளை மேலாளா் ஸ்ரீதரன் ஆகியோா் முன்னிலையில் எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டது. இதில் 125 மாணவா்கள் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இதனையடுத்து, தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி