குருக்கபுரம் பொது மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்

82பார்த்தது
குருக்கபுரம் பொது மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ராசிபுரம் ஒன்றியம் குருக்கபுரம் ஊராட்சியில், (2024 - 2025) சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 19.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்தல் மற்றும் ரூ. 7.50 இலட்சம் மதிப்பீட்டில் 120மீட்டர் தூர கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் ஜெகநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் பாலசந்தர், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி