பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் இன்று (நவம்பர் 29) காலை முதலே மளிகைக்கடை, துணிக்கடை, ஜவுளிக்கடை மற்றும் சிறிய சிறிய பெட்டிக்கடைகள் ஆகியவை திறக்கப்படவில்லை. கடை உரிமையாளர்கள் கட்டணம், தொழில்வரி, சொத்துவரி உயர்வை கண்டித்து பரமத்தி வேலூர் வர்த்தக சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மளிகைக்கடைகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.