குழந்தைகள் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு

70பார்த்தது
குழந்தைகள் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் அனுராதா புரோக்கர்கள் மூலம் குழந்தைகளை விற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த 15. 10. 23 அன்று மருத்துவர் அனுராதா மற்றும் பெண் புரோக்கர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து நாலு கால் மண்டபம் அருகே இருந்த தமிழரசு மருத்துவமனையில் மருத்துவர் அனுராதா பயன்படுத்தி வந்த அறைகள் மற்றும் நாமக்கல் ரோட்டில் உள்ள அவருக்கு சொந்தமான சிகாமணி மருத்துவமனை ஆகியவை அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மருத்துவர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் திலகம் தலைமையில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் திருச்செங்கோட்டில் சீல் வைக்கப்பட்ட மருத்துவர் அனுராதாவுக்கு சொந்தமான இடங்களில் சீலை அகற்றி உள்ளே இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி