மகா மாரியம்மன் கோயில் தோ், குண்டம் திருவிழா தொடக்கம்

53பார்த்தது
மகா மாரியம்மன் கோயில் தோ், குண்டம் திருவிழா தொடக்கம்
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காப்புகட்டி, கம்பம் நடப்படும் விழாவுடன் தொடங்கியது.

மே 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெறுகின்றன. 18-ஆம் தேதி பூச்சொறிதல் விழாவும், 19-ஆம் தேதி மறுகாப்பு கட்டுதலும் நடைபெறுகின்றன. 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இரவு சிங்கம், காமதேனு, காளை வாகனங்களில் உற்சவ மகா மாரியம்மன் புறப்பாடு, அன்னபட்சி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகின்றன.

26-ஆம் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், மாவிளக்கும் பூஜையும், இரவு குதிரை வாகன புறப்பாடும், 27-ஆம் தேதி மாலை 4. 30 மணிக்கு மகா மாரியம்மன் திருத்தேரில் திருவீதி உலா நிகழ்ச்சியும், 28-ஆம் தேதி மாலை 4 மணிக்கு குண்டம் திருவிழாவும், மாலை 6 மணிக்கு உற்சவ மகா மாரியம்மன் திருவீதி உலா வருதம் நிகழ்ச்சி நடைபெறுகின்றன.

29-ஆம் தேதி பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சியும், 30-ஆம் தேதி கிடாவெட்டு நிகழ்ச்சியும், 31-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகின்றன.

தோ்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோயில் ஊா் காரியக்காரா், பண்ணையக்காரா், பொதுமக்கள் செய்து வருகின்றனா்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி