மாவட்ட இளையோர் கால்பந்து போட்டி நாமக்கல் கைலாஷ் பள்ளி சாதனை"

75பார்த்தது
மாவட்ட இளையோர் கால்பந்து போட்டி நாமக்கல் கைலாஷ் பள்ளி சாதனை"
நாமக்கல் கைலாஷ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியின் சார்பில், மாவட்ட அளவிலான இளையோர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் இருந்து திரளான பள்ளி மாணவ மாணவிகள் போட்டியில் கலந்துகொண்டனர். இதில், கைலாஷ் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தனர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா கோப்பையை வழங்கி பேசினார். அப்போது, மாணவ மாணவியர் அனைவரும் அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளில் கலந்துகொண்டு விளளயாட வேண்டும். அப்போதுதான் அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறினார். கைலாஷ் ஸ்கூல் ஆஃப் எக்ஸன்ஸ் பள்ளி தாளாளர் டாக்டர் கதிர்வேல், செயலாளர் ஆர்த்திலட்சுமி, இயக்குனர் கிருத்திக் கைலாஷ், பள்ளி முதல்வர் கோவிந்த், மாவட்ட பெண்கள் கால்பந்து அணி பயிற்சியாளர் சதீஷ்குமாரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கால்பந்து தொடருக்கான ஏற்பாடுகளை பள்ளியின் கால்பந்து பயிற்சியாளர் ஜெகதீஷ் செய்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி