நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மோடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 22). கார் டிரைவர். இவருக்கும், சங்ககிரி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி கோபிநாத், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்தபோது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தொியவந்தது. இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது கர்ப்பத்துக்கு காரணம் கோபிநாத் என தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுமித்ரா சிறுமியை கர்ப்பமாக்கிய கோபிநாத் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.