1. 43 கோடியில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது

71பார்த்தது
நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச. உமா தலைமை வகித்தாா். திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ஆா். ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் எஸ். எம். மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்
இதில் வனத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் பங்கேற்று, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடைய 97 பெண்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 24. 25 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை, தலா 8 கிராம் வீதம் மொத்தம் 776 கிராம் தங்கம், பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு கல்வித் தகுதியுடைய 239 பெண்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 1. 19 கோடி மதிப்பில் திருமண உதவித்தொகை, தலா 8 கிராம் வீதம் 1, 912 கிராம் தங்கம் என மொத்தம் 336 பெண்களுக்கு ரூ. 1. 43 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியுடன், தலா 8 கிராம் வீதம் 2, 688 கிராம் தாலிக்கு தங்கத்தை வழங்கினாா்.

டேக்ஸ் :