நாமக்கல்: அரிசி கேட்பது போல செல்போன் திருட்டு

2580பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் முனியப்பன் என்பவர் அரிசி, சமையல் எண்ணெய் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு மதியம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உள்ளே வந்தார். அப்போது கடையின் உரிமையாளரை திசை திருப்பி உள்ளே அழைத்துச் செல்ல முயன்றார். அவர் கடையின் உள்ளே ஊழியர் இருக்கிறார் அவர் அரிசியை காட்டுவார் என கூறிவிட்டு கல்லாவின் அருகிலே அமர்ந்து கொண்டு போன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பிறகு வருவதாக கூறி வெளியே சென்றவர் மீண்டும் கடையின் கல்லா அருகே வந்து சேம்பிள் அரிசி கொடுக்குமாறு கடை ஊழியரிடம் கேட்டுள்ளார். அவர் உள்ளே சென்ற நேரத்தில் இதனை சாதகமாக பயன்படுத்தி கடை மேஜை மீது இருந்த சுமார் 15000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை அந்த நபர் எடுத்து தனது சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சாம்பிளாக கொடுத்த அரிசியை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

இந்நிலையில் கடையின் உரிமையாளர் முனியப்பன் தனது செல்போன் காணாமல் போனது கண்டு பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பார்த்த பொழுது, அதில் மதிய நேரத்தில் வந்த அந்த நபர் செல்போனை திருடி சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் முனியப்பன் புகார் அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி