டூவீலரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

4671பார்த்தது
குமாரபாளையத்தில் டூவீலரில் சென்ற பெண்ணிடம் டூவீலரில் வந்த இரு இளைஞர்கள் தங்க செயின் பறித்து சென்றனர்.

குமாரபாளையம் பெராந்தர்காடு பகுதியில் வசிப்பவர் சுமதி, 45. இவர் பிப். 15ல் காலை 08: 00 மணியளவில் பள்ளிபாளையம் சாலை, காந்திபுரம் பகுதியில் தனது சுசுகி அக்சஸ் டூவீலரில், தனியார் பள்ளியில் படிக்கும் தன் மகனுக்கு உணவு கொடுக்க சென்று கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு அருகே டூவீலரில் வந்த இளைஞர்கள் இருவரில் பின்னால் உட்கார்ந்த நபர், சுமதி கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றனர்.

வண்டி ஒட்டிய நபர் ஹெல்மெட் அணிந்தும், பின்னால் உட்கார்ந்த நபர் முகத்தை கைக்குட்டையால் மூடி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பல இடங்களில் விசாரணை செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி