விஜயகாந்த்க்கு  அனைத்து கட்சியினர் கண்ணீர் அஞ்சலி....

81பார்த்தது
விஜயகாந்த்க்கு  அனைத்து கட்சியினர் கண்ணீர் அஞ்சலி....
குமாரபாளையத்தில் விஜயகாந்த்க்கு  அனைத்து கட்சியினர்  மவுன ஊர்வலம் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திரைப்பட நடிகரும்,  தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவனருமான கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த்,  உடல்நலமில்லாமல் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.   விஜயகாந்த் மறைவிற்கு அனைத்து கட்சியினர் சார்பில் ராஜம் தியேட்டர் முன்பிருந்து தே. மு. தி. க. மாவட்ட பொருளர் மகாலிங்கம், ஒன்றிய நிர்வாகி  பாலு, நகர செயலர் ராஜ்,  முன்னாள் ம. தி. மு. க. நகர செயலர் விஸ்வநாதன் தலைமையில் துவங்கிய மவுன  ஊர்வலம்,  சேலம் சாலை வழியாக பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நிறைவு பெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அனைத்து கட்சி நிர்வாகிகள் விஜயகாந்த் செய்த சாதனைகள் குறித்தும், பொதுமக்களுக்கு, கலைஞர்களுக்கு செய்த உதவிகள் குறித்தும் நினைவு கூர்ந்தனர்.  தி. மு. க. அன்பழகன், அன்பரசு, அ. தி. மு. க. திருநாவுக்கரசு, ஒ. பி. எஸ். அணி அ. தி. மு. க. சீனிவாசன், லோகநாதன், காங்கிரஸ் ஜானகிராமன், சிவராஜ், தங்கராஜ், மக்கள் நீதி மய்யம் சித்ரா, மல்லிகா, சி. பி. எம் சரவணன், சி. பி. ஐ. கணேஷ்குமார், தி. க. சரவணன், நில முகவர் சங்க நிர்வாகி பாண்டியன், தளபதி லயன்ஸ் சங்க தலைவர் சண்முகசுந்தரம், விடியல் பிரகாஷ், பஞ்சாலை சண்முகம்  உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி